ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் (கைதட்டல்)
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்
சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்
சங்கீதம்தான் இல்லையென்றால்
வாழ்வு ஒரு வாழ்வல்ல
தண்ணீர் மட்டும் இல்லையென்றால்
ஆறு என்று பேரல்ல
நாதம் ஒன்று இல்லையென்றால்
நான் இங்கு நானல்ல
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லல லாலலா
லல லாலலா
லால லா லா லா லா
லால லால லா லா
ஓடை ஒன்று பாடிச் செல்லும்
இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும்
பூமி நின்றுக் கேட்கத்தான்
ஓடை ஒன்று பாடிச் செல்லும்
இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும்
பூமி நின்றுக் கேட்கத்தான்
தென்றல் ஒன்று பாடி போகும்
செடி கொடிக் கேட்கத்தான்
சின்னக் குயில் பாட வந்தேன்
ஏழை மக்கள் கேட்கத்தான்
சங்கீதமும் சந்தோஷமும்
எல்லோரும் வாழத்தான்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
1 comments:
Very good post, please checkout my website: Helfoo!
Post a Comment