நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஹோ ஹோ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஹோ ஹோ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் ஹோ ஹோ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ..
Ninaithu Ninaithu Paarthaen
Nerungi Vilagi Nadandhaen
Unnaal Dhaanae Naanae Vaazhgiraen Oh
Unnil Indru Ennai Paarkkiraen
Eduthu Padithu Mudikkum Munnae
Eriyum Kadidham Edharku Pennae
Unnaal Dhaanae Naanae Vaazhgiraen Oh
Unnil Indru Ennai Paarkkiraen
Amarndhu Paesum Marangalin Nizhalum
Unnai Kaetkum Eppadi Solvaen
Udhirndhu Poana Malarin Mounama
Thoodhu Paesum Kolusin Oliyai
Araigal Kaetkum Eppadi Solvaen
Udaindhu Poana Valaiyal Paesuma
Ullangaiyial Veppam Saerkkum
Viralgal Indru Engae?
Thoalil Saayndhu Kadhaigal Paesa
Mugamum Illai Ingae
Mudhal Kanavu Mudiyum Munnamae
Thookkam Kalaindhadhey
Paesi Poana Vaarthaigal Ellaam
Kaalam Dhoarum Kaadhinil Kaetkum
Saambal Karaiyum Vaarthai Karaiyuma?
Paarthu Poana Paarvaigal Ellaam
Pagalum Iravum Kaelvigal Kaetkum
Uyirum Poagum Uruvam Poaguma?
Thodarndhu Vandha Nizhalgal Ingae
Theeyil Saerndhu Poagum
Thiruttu Poana Thadayam Paarthum
Nambavillai Naanum
Oru Tharunam Edhirinil Thoandruvaay
Endrae Vaazhgiraen Naanum....
0 comments:
Post a Comment