Showing posts with label Mannan. Show all posts
Showing posts with label Mannan. Show all posts

Raajaathi Raajaa Un Thanthirangal

0 comments

Wednesday, December 4, 2013


ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா

நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

லால லால லால லால லால லா

தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

லால லால லால லால லால லா

காதும் காதுமாய்

காதல் மந்திரம்

ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஓடை மீது ஓடம் போல ஆட வா

லால லால லால லால லால லா

உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

லால லால லால லால லால லா

காதல் கன்னிகை

காமன் பண்டிகை
காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி

என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ரூபாப்பா..... ராபாப்பா....ராப பப்பா
ரூ. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூடூரூ....ரூ




Raajaathi Raajaa Un Thanthirangal
Nirkaamal Koothaadum Pambarangal

Maaya Jaalam Enna Maiyal Kondu
Neeyum Naalum Aattam Podavaa..

Naeram Kaalam Enna Naesam Kondu
Neeyum Kaathal Thottam Podavaa

Hey Raani Ennodu Aada Vaa Nee
Poo Maeni Kondaadum Venpani

Ennaalum Raajaathi Raajaa Un Thanthirangal
Nirkaamal Koothaadum Pambarangal

Maan Koottam Meen Koottam
Vaedikkai Paarkkindra Kan Irandilae Enna Mayakkam

Maamaangam Aanaalum Mannaavum
Naan Saernthu Sinna Malar Thaan Sinthu Padikkum

Kaiyodu Kai Saerum Kalyaana Vaibogam
Kandu Kalikkum Kaalam Pirakkum

Maela Saththam Kaetpathentha Thaethiyo

la ala laa laa laa laa

Devanukku Sontham Intha Deviyo

la la laa laa laa laa

Kaathum Kaathumaai Kaathal Manthiram
Oathugindra Mannan Allavo

Ennaalum Ingu Raajaathi Raajaa Un Thanthirangal
Nirkaamal Koothaadum Pambarangal Nindraalum

Sendraalum Pinnodu Ennaalum
Vantha Nizhalae Vanna Mayilae

Thottaalum Pattaalum Muthaaram Ittaalum
Enna Sugamae Enna Suvaiyae

Un Maeni Pon Maeni Innaalum
Ennaalum Ennai Mayakka Thannai Marakka

Odai Meethu Odam Pola Aada Vaa
la la la la la la la

Unnai Andri Yaarum Illai Aadavaa

la la la la la la la laa

Kaathal KannigaiKaaman Pandigai
Kaanugindra Kaalam Allavaa

Ennaalum Ingu Raajaathi Raajaa Un Thanthirangal
Nirkaamal Koothaadum Pambarangal

Maaya Jaalam Enna Maiyal Kondu
Neeyum Naalum Aattam Podavaa.

Naeram Kaalam Enna Naesam Kondu
Neeyum Kaathal Thottam Podavaa

Hey Raani Ennodu Aada Vaa Nee
Poo Maeni Kondaadum Venpani

Ennaalum Raajaathi Raajaa Un Thanthirangal
Nirkaamal Koothaadum Pambarangal

roo paa paa roopaa roopaapa
roo paa paa roopaa roopaapa




Amma endrazhaikadha

0 comments

Tuesday, January 29, 2013


அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

Amma endrazhaikadha


Amma endrazhaikadha uyirillaye
Ammavai vanangadhu uyarvillaye
Neril Nindru Pesum Dheivam
Petra thaai andri verondru edhu                                                     
[Amma]

Abirami Sivagami Karumaari Magamaayi
Thirukovil Dheivangal nee dhannamma 
Annaiku andradam abhishegam alangaram
purigindra siru thondan nan dhannamma
Porulodu pugal vendum maganalla thaye un
arul vendum enakingu adhu podhume
Aduthingu pirapondru amaindhalum nan undhan
maganaga pirakindra varam vendume
Adhai neeye tharuvaye                                                               
[Amma]

Pasunthangam Pudhuvelli Manickam Manivairam
Avaiyavum Oru thaaiku eedaguma?
Vilai meedhu vilai vaithu kettalum koduthalum
Kadai thannil thaai anbu kidaikadhamma
Eeraindhu maadhangal karuvodu enai thaangi
nee patta perum paadu arivennamma
Eerezhu jenmangal eduthalum uzhaithalum
unakingu nan patta kadan theeruma?
Unnale pirandhene....                                                               
[Amma]