புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா - அதை சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி எழுப்புது எழுப்புது ஏனம்மா? இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா? நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா...
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு? பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு? இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும் கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா... வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு? ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு? மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் அம்மம்மா... வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
மீனம்மா... அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே சின்னச்சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும் மின்னல்போல வந்து வந்து போக உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா ஒரு ஜன்னல் அங்கிருக்கு உனை எட்டிப்பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டிட வா ஜாதிமல்லிப்பூவே தங்கவெண்ணிலாவே ஆசைதீரவே மெதுவாய் மெதுவாய்த் தொடலாம்
மீனம்மா... அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே சின்னச்சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும் மின்னல்போல வந்து வந்து போக உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
அன்று காதல் சொல்லியதும் இரு கன்னம் கிள்ளியதும் அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது மாமன்காரன் நானே பாயைப்போடு மானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் வரலாம்